வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம்’ சார்பில் அளித்துள்ள மனுவில், ‘‘வேலூர் மாவட் டத்தில் 3 எண்ணெய் நிறுவனங்களில் காஸ் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். காஸ் சிலிண்டர் விநியோகப் பணியில் 2,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொழிலாளர்கள் கரோனா பெரும் தொற்று காலத்திலும் மக்கள் பாதிக்காத வகையில் தினசரி சிலிண்டர் விநியோகம் தடையில் லாமல் செய்து வருகின்றனர்.
தொற்று தடுப்பு உபகரணங்கள்
முன்களப் பணியாளர்களை போல் மக்களுக்கு சேவை செய்து வரும் இந்த தொழிலாளர்களை மத்திய-மாநில அரசுகள் முன்களப் பணியாளர்களாகவே அறிவிக்க வேண்டும். ஏஜென்சிகளிடம் இருந்து தொற்று தடுப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளையும் பெற்றுத்தர வேண் டும். முறையான மாத ஊதியம் வழங்குவதோடு, இஎஸ்ஐ, தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago