திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று அளிக்கப்பட்ட மனுவில், "தமிழகத்தில் கரோனா பரவல் அதிகமாகஉள்ளதாலும், ஊரடங்கு காலத்தினாலும் வேலைவாய்ப்பின்றியும், வருவாய் இன்றியும் பலர் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா பரவலுக்கு வழிவகுக்கும் வகையில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இது தவறான முன்னுதாரணம். கரோனா இரண்டாம் அலையில், தமிழகத்தில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பலர் சிகிச்சையில் உள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் மதுபானக் கடையை திறப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் கடை திறப்பால் பொருளாதார ரீதியாக பல்வேறு தரப்பினர் கடும் பாதிப்பை சந்திப்பார்கள். எனவே, டாஸ்மாக் கடையை தமிழக அரசு மூட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago