காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளபொதுமக்கள் பலர் ஆர்வத்துடன்திரண்டனர். தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வத்துடன் திரள்வதால் சமூக இடைவெளியைப் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் கடந்த காலங்களில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. தடுப்பூசி குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் அதிகம் இருந்தது. ஆனால் கரோனா 2-ம் அலையில் கரோனா தொற்று அதிகரித்ததுடன் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் பலர், தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இதுவரை 1,53,250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 18 வயதுக்கு மேற்பட்டு 45 வயதுக்கு உட்பட்ட 89 ஆயிரத்து 600 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
குறைந்த அளவு தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் இருப்பதால்கரோனா தடுப்பூசி முகாம்கள்போதிய அளவில் நடைபெறவில்லை. இந்தச் சூழ்நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டனர். அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago