விழுப்புரம் டாஸ்மாக் கடைகள் வெறிசோடியது :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 120 அரசு டாஸ்மாக் கடைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 102 டாஸ்மாக் கடைகளும் என ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 222 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

கடந்த மே 9-ம் தேதி முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்தது.

இதையடுத்து 35 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கும் என அரசு அறிவித்தது. இதையடுத்து நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிக அளவில் கூடும் என்பதால் கடைகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஆனால் விழுப்புரம் ஜானகிபு ரம் கடை கூட்டமே இல்லாமல் வெறிச் சோடிக் காணப்பட்டது. மேலும் பெரும்பாலான கடைகளில் மது இருப்பும் இல்லை. நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை என்பதால், நேற்று காலை முதல் கடைகளுக்கு மதுவகைகள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லாமல் காணப்பட்டது.

இது குறித்து டாஸ்மாக் பணியாளர்களிடம் கேட்டபோது, கடந்த8ம் தேதி புதுச்சேரியில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டது. விழுப்புரம் நகரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர்தூரத்தில் புதுச்சேரி மாநில எல்லை தொடங்குகிறது. எல்லையிலேயே மதுபானக்கடைகளும் உள்ளது.

மேலும் தமிழகத்தைவிட புதுச்சேரியில் மதுபான விலைகள் தற்போது குறைவாக உள்ளது. இதனாலும் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. இரண்டொரு நாளில் கடைகள் வழக்கமான உற்சாகத்துடன் இயங்கும் என்று தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 147 டாஸ்மாக் கடைகளும் நேற்றுகாலை திறக்கப்பட்டன.

ஒவ்வொரு கடையிலும் அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று காலை கூட்டம் இல்லை. சில கடைகள் வெறிச்சோடி கிடந்தன. ஒரு சில கடைகளில் மட்டும் சிலர் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்