உழவர்களுக்காக சந்தை வளாகங்களில் - தடுப்பூசி முகாம் அமைக்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கரோனா ஊரடங்கு காலத்தில் நோய் தொற்றை தவிர்க்க மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையிலும், தான் உற்பத்தி செய்யும் விளைபொருளை சந்தைக்கு நேரடியாக எடுத்துச் சென்று விற்க வேண்டிய நிலை இருப்பதால், உழவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, உழவர்களுக்கு சந்தையிலேயே சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசிகளை செலுத்த வேண்டும்.

நாள்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் பால் உற்பத்தி செய்யும் உழவர்கள், கூட்டுறவு சங்கங்களை நாடி வர வேண்டிய சூழ்நிலை இருப்பதால், அவர்களுக்கும் அங்கேயே முகாம்களை அமைத்து தடுப்பூசி செலுத்த வேண்டும். உற்பத்தி பொருளுக்கு விலை இல்லாமை, பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் தொல்லைகள், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளால் சிரமப்படும் உழவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், விரைவில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்