திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்தப்படும் என,மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற கிராந்தி குமார் பாடி தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இவை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் மாநகராட்சி ஆணையராக 2018-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த கே.சிவக்குமார் கடந்த சில நாட்களுக்குமுன்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக ஆந்திராவை சேர்ந்தவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி கிராந்தி குமார் பாடி திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில்புதிதாக நியமிக்கப்பட்ட மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கிராந்தி குமார் பாடி கூறும்போது, ‘‘திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கரோனா நோய் பரவல் தடுப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும். பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். பொதுமக்களின் பிரச்சினைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் தீர்த்து வைக்கப்படும்''என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago