திண்டுக்கலில் 6 நாளுக்கு பின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

திண்டுக்கலில் கரோனா தடுப்பூசி செலுத்துவது தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆறு நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று முதல் தடுப்பூசி செலுத்தும்பணி தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தை அடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. மத்திய அரசு தமிழகத்துக்கு தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததையடுத்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு 12,600 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன. இவை நேற்று முன்தினம் திண்டுக்கல் வந்து சேர்ந்தன.

இதையடுத்து மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், சிறப்பு முகாம்களில் நேற்று முதல் தொடங்கியது.

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் நடந்த சிறப்பு முகாமில் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகக் காத்திருந்து ஆர்வத்துடன் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்