கரோனா முன்களப் பணியாளர்களான காவல் துறையினருக்கு மூச்சுப் பயிற்சி :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி வரும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிக்காக ஒரே இடத்தில் நீண்டநேரம் நிற்பதால் நரம்பு சுருள் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் முதுகுவலி, மூட்டுவலியாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், போலீஸாருக்கு எளிய வகையான பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தஞ்சாவூரில் முதல்கட்டமாக ஆயுதப்படை போலீஸாருக்கு மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நேற்று முன்தினம் அளிக்கப்பட்டன. இதில், 75-க்கும் மேற்பட்ட போலீஸார் பங்கேற்றனர்.

இவர்களுக்கு, “நுரையீரலை சிறப்பாக செயல்பட எந்தெந்த வகையில் மூச்சுப் பயிற்சி செய்யவேண்டும். எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். மூட்டுவலி, முதுகுவலிக்கு தீர்வு என்ன, கால் மரத்து போகாமல் இருக்க என்னென்ன பயிற்சி செய்ய வேண்டும்” என்பன குறித்து இயன்முறை மருத்துவர் முருகபிரபு பயிற்சி அளித்தார். இந்தப் பயிற்சியை எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் பார்வையிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்