வரிசையில் நிற்க தடுப்புகள் அமைப்பு - டாஸ்மாக் கடைகளை திறக்க ஆயத்தம் :

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பகுதியாக கரோனா பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை திறப்பத ற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தென்காசி மாவட்டத்தில் 70 டாஸ்மாக் மதுபான கடைகள், திருநெல்வேலி மாவட்டத்தில் 98 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன.

இவற்றில் மது வாங்க வருவோர் வரிசையில் நிற்க தடுப்புகள் அமைக்கும் பணி மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வட்டங்கள் வரையும் பணி நேற்று நடைபெற்றது. தென்காசியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையின் வாசலில் வேப்பிலை தோரணங்களையும் கட்டினர். நீண்ட நாட்களுக்கு பின்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடைகளின் உள்ளேயும், வெளியேயும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். கடைகளுக்கு வெளியே பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். கடைக்கு வரும் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்பன உட்பட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் தேவையான அளவுக்கு மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்