முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சமுதாய வளர்ச்சிக்கு சேவை செய்யும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகை யில் ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ வழங்கப்படு கிறது. 15 வயது முதல் 35 வயதுவரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சுதந்திர நாளில் ரூ.50 ஆயிரம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.
அதன்படி, 2021-ம் ஆண்டுக் கான விருது வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வழங்கப்படவுள்ளது. 15 வயது முதல் 35 வயது உள்ள ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 01-04-20 முதல் 31-03-21-ம் தேதி வரை செய்யப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில்எடுத்துக் கொள்ளப்படும். தமிழகத் தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்கப் பட வேண்டும். செய்யப்பட்ட தொண்டு என்பது கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாக இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல் கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விருதுக்கு விண்ணபிக்கக் கூடாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கும், விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
இணையதள மூலம் வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் இணையதளம் மூலம் (ஆன்லைன்) விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago