திருவண்ணாமலை, செங்கம் சாலையில் உள்ள காலி இடத்தில் திறக்கப்பட்ட மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு இறைச்சி கடைகளை கடந்த 7-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதித்தது.
வார இறுதி நாளில் மீன் மற்றும் இறைச்சி வாங்க மக்கள் அதிகளவில் கூடும்போது, தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால், திறந்தவெளி இடத்தில் மீன் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளை அமைக்க தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, தி.மலையில் மீன் மற்றும் இறைச்சிக் கடை இட மாற்றம் செய்யப்பட்டது. தண்டராம்பட்டு சாலை மற்றும் மார்க்கெட் பகுதியில் இயங்கி வந்த மீன் மற்றும் இறைச்சிக் கடைகள், செங்கம் சாலையில் உள்ள காலி இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டன.
வார இறுதி நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மக்கள் வருகையின்றி மீன் மற்றும் இறைச்சி சந்தைகள் வெறிச்சோடின. இதனால், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந் துள்ளனர்.
வேலூரில் விற்பனை அமோகம்
வேலூர் மக்கான் சிக்னல் பகுதி அருகே தற்காலிக பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சில்லறை மீன் மார்க்கெட்டில் நேற்று அதிகாலை முதல் பொதுமக்கள் மீன் வாங்க திரண்டிருந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியாமல் மீன் வாங்கிச் சென்றனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago