வேலூர் மாவட்ட ஆட்சியராக குமாரவேல் பாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக அமர் குஷ்வாஹா, தி.மலை மாவட்ட ஆட்சியராக முருகேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசின் முதன்மை செய லாளர் இறையன்பு உத்தரவிட் டுள்ளார். இதில், வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சண்முகசுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், தமிழக பதிவுத்துறை ஐஜியாகவும் இடமாற்றம் செய்யப் பட்டனர்.
இதையடுத்து, கோவை மாநகராட்சி ஆணையாளராக பணி யாற்றி வந்த குமாரவேல் பாண்டி யன், வேலூர் மாவட்ட ஆட்சியராக வும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்த அமர் குஷ்வாஹா, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர்
வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள குமாரவேல் பாண்டியன், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த 1972-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பிறந்தவர். தந்தை பெரியசாமி, தாய் பெரியநாயகி. கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியல் பட்டப் படிப்பும், பாரதியார் பல்கலை தொலைநிலை கல்வியில் சுற்றுலா மேலாண்மை படிப்பில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.2005-2006 வரை கரூரில் பயிற்சி துணை ஆட்சியராகவும், 2006-2008 வரை ஈரோடு வருவாய் கோட்டாட்சியராகவும் 2008-09 வரை கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும்,2009-10 வரை கோவை மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளராகவும், 2010-11 வரை ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராகவும், 2011-13 வரை சென்னை ஆவின் பொது மேலாளர் (நிர்வாகம்), 2013-17 வரை மாநில தொழில் வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளராகவும், 2017-ம் ஆண்டு மாநில இடர்பாடு மேலாண்மை முகமையின் இணை இயக்குநராகவும், 2018-ம் ஆண்டு வேளாண் துறை கூடுதல் இயக்குநராகவும், 2018-20 வரை சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (கல்வி) மற்றும் துணை ஆணையாளராக (பணிகள்) பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்போது வரை கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றியுள்ளார்.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்ட ஆட்சியராக கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்த சந்தீப் நந்தூரி மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த பி.முருகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்தாண்டு நவம்பர் மாதம்15-ம் தேதி மாலை பொறுப்பேற்றுக் கொண்டு பணியை தொடங்கினார்.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன டிப்டையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக, கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்த சந்தீப் நந்தூரி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், சுற்றுலாத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த பி.முருகேஷ், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக் கப்பட்டுள்ளார். அவர், விரைவில் தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago