நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கோலாரம் கிராமத்தில் 1,100 பொதுமக்களுக்கு பிஎஸ்டி இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிஎஸ்டி இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவன சேர்மன் டாக்டர் தென்னரசு தலைமை வகித்தார். தொடர்ந்து கோலாரம் ஊராட்சிக்கு உட்பட்ட கருக்கம்பாளையம், கரிச்சி பாளையம், வைரம்பாளையம், வாவிபாளையம், காட்டூர், கருமகவுண்டம்பாளையம், தாளக்கரை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் உட்பட 1,100 பொதுமக்களுக்கு 10 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
கோலாரம் ஊராட்சித் தலைவர் மணிமேகலை, துணைத் தலைவர் பேபி, வார்டு உறுப்பினர்கள் செந்தில் ராஜா, பூங்கொடி, வித்யா, சாரதா, கவுசல்யா மற்றும் ஊராட்சி செயலர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago