தஞ்சாவூர் அருகே ஆழிவாய்க் கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கா.ரவிச்சந்திரன்(52). பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனா ளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.
அரசு வழங்கும் மாற்றுத்திற னாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 தான் இவரது குடும்ப வருமானமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் 2 கன்றுக்குட்டிகளை வாங்கி வளர்த்து வந்தார். பிளஸ் 2 முடித்துள்ள தனது 2-வது மகனை கல்லூரியில் சேர்க்கும்போது, இந்த கன்றுக் குட்டிகளை விற்று வரும் பணத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையே, தன்னிடம் இருந்த 2 கன்றுக்குட்டிகளையும் ரூ.6,000-க்கு விற்று, அந்தப் பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்காக ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் கடந்த 9-ம் தேதி ரவிச்சந்திரன் வழங்கினார்.
இதையறிந்த தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுரையின்படி, தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று ஆழிவாய்க்காலில் உள்ள ரவிச்சந்திரனின் வீட்டுக்கேச் சென்று, கறவை மாடு வாங்கி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் வகையில், தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.50,000-க்கான காசோலையை வழங்கினார்.
அப்போது, கோட்டாட்சியர் வேலுமணி, ஒரத்தநாடு ஒன்றியக் குழுத் தலைவர் பார்வதி சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago