கரோனா பரவல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜமாபந்தி மனுக்களை பொது மக்கள் ஆன்லைன் மற்றும் இ-சேவை மையம் மூலம் ஜூலை மாத இறுதி வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறியதாவது, "ஆண்டுதோறும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்வு வருவாய்த் துறையின் கணக்கு சரிபார்ப்பு நிகழ்வு நடைபெறுகிறது. கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன் கீழ் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்வு திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,430 பசலி (2020-21)க்கான ஜமாபந்தி மனுக்கள் பொது மக்களிடம் இருந்து நேரடியாக பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் வருவாய் தீர்வாயம் தொடர்பான கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன் https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணைய தள முகவரி வாயிலாகவோ அல்லது தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாகவோ ஜூன் 10-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை பதிவேற்றம் செய்து அதற்கான ஒப்புதல் ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் மீது உரிய முறையில் பரிசீலினை செய்து மனுதாரர்களுக்கு பதில் வழங்கப்படும். மேலும், கரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களில் மனுக்கள் அளிக்கும்போது தவறாமல் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றி மனுக் களை பதிவேற்றம் செய்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago