திருப்பத்தூர் வட்டத்தில் 8 மருந்து கடைகளுக்கு ‘சீல்’ :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் மருந்து, மாத்திரைகள் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த பதிவேடு இல்லாத 8 மருந்தகங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் போலி மருத்துவர்கள் மீதும் மருத்துவர் களின் பரிந்துரை இல்லாமல் மருந்து, மாத்திரைகளை விநியோ கம் செய்தது, யாருக்கு மருந்து விற்பனை செய்யப்பட்டது என்ற விவரங்களை பராமரிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், இதனை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.

அதன்படி, திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள மருந்தகங்களில் ஆட்சியரின் அறிவுரைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நேற்று நடத்தப் பட்டது. மருந்து ஆய்வாளர்கள் மணிமேகலை, மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள் சிலம்பரசன், ராஜேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில், பொன்னேரி மித்ரா, அரவிந்த், பொம்மிகுப்பம் மும்தாஜ், எஸ்கேஎம், காளிகாபுரம் சிவசக்தி, பேராம்பட்டு வெங்கடேசன், கெஜல் நாயக்கன்பட்டி விஷ்ணு, சீனிவாசா மருந்தகம் என மொத்தம் 8 மருந்துக் கடைகளில் மருந்து யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த பதிவேடுகள் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இந்த 8 மருந்துக் கடைகளுக்கும் வருவாய்த் துறையினர் உடனடியாக ‘சீல்' வைத்தனர்.

மேலும், மருந்துக் கடைகளின் உரிமையாளர்கள் மீது பெருந் தொற்று பேரிடர் மேலாண்மை சட்டத் தின் கீழ் நடவ டிக்கை எடுக் கப்படும் என எச்சரிக் கப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்