கரோனா பரவல் தடுப்பு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்திடவும், அதிகாரப்பூர்வ தகவல்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாகவும் http://ramanathapuramfightscovid.com/ என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள பரிசோதனை மையங்கள், படுக்கை வசதிகள் குறித்த விவரங்கள், கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மையங்கள், கரோனா கட்டுப்பாடு மையத்தின் தொடர்பு எண்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தின் செயல்பாட்டினை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று தொடங்கி வைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago