திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவதாக திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குநர் சாமிநாதன் தெரிவித்தார்.
இயந்திரம் மூலமாக குறுவை நேரடி நெல் விதைப்பு செய்வது குறித்த செயல்விளக்கம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் கிரா மத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியை, வேளாண் உதவி இயக்குநர் சாமிநாதன் தொடங்கி வைத்து கூறியது: மேட்டூர் அணையிலிருந்து நாளை(இன்று) குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவதால், திருத்துறைப் பூண்டி விவசாயிகள் மகிழ்ச்சியாக சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். ஏற்கெனவே, கோடை உழவு செய்து தயார் நிலையில் இருக்கும் விவசாயிகள், திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்கள் காவிரியின் கடைமடைப் பகுதிகள் என்பதால், இப்பகுதிகளுக்கு ஆற்றுநீர் வந்து சேர்ந்தபின் நாற்று விட்டு நடவு செய்தால் பருவம் தள்ளிப் போய், வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் நேரத்தில் அறுவடை செய்யும் சூழ்நிலை ஏற்படும். இதனால், விவசாயிகளுக்கு அதிக சிரமம் ஏற்படும்.
எனவே, குறுவை பருவத்தில் முன்கூட்டியே அறுவடை செய்வ தற்கு ஏற்ப, இப்போதே நேரடி நெல் விதைப்பு செய்வதே சிறப்பானது. இந்த முறையில் சாகுபடி செலவும், பண்ணைத் தொழி லாளர்களின் தேவையும் குறைவு. மேலும், புரட்டாசி மாதத்திலேயே பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும். இதனால், நல்ல மகசூல் கிடைக்கும். எனவே, விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் கவுசல்யா தலைமை வகித்தார். வேளாண் உதவி அலுவலர் மகேஷ், ஜோதிகணேஷ், ரமேஷ் மற்றும் விவசாயிகள் 50 பேர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago