தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தில் பணியாற்றும் - மருந்தாளுநர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி முதல்வரிடம் மனு :

By செய்திப்பிரிவு

தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நலத் திட்டத்தில் பணியாற்றும் மருந்தாளுநர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரி மருந்தாளு நர்கள் தமிழக முதல்வரிடம் நேற்று மனு அளித்தனர்.

தஞ்சாவூர் வெண்ணாறு தூர் வாரப்பட்டுள்ளதை நேற்று பார்வை யிட வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தில் பணியாற்றும் மருந்தாளுநர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளது: தமிழகம் முழுவதும் தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நல திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளாக 805 பேர் மருந்தாளுநர்களாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறோம். மாத தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகி றது.

தற்போது அரசு மருத்துவ மனைகளில் மருந்தாளுநர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. கரோனா தொற்று காலத்திலும் பொதுமக்களுக்கு உரிய மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்தில் பணியாற்றி வரும் எங்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நல திட்டத்தின் கீழ் பணியாற்றும் அனைவரையும் நிரந்தர அரசு மருந்தாளுநர்களாக நியமிக்க வேண்டும் என தெரி வித்துள்ளனர்.

அதேபோல, 2008-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு நடமாடும் மருத்துவமனை ஓட்டுநர்கள் 385 பேர் தமிழகம் முழு வதும் காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரி தஞ்சாவூரில் உள்ள நிர்வாகிகள் மூலம் முதல்வரிடம் மனு அளித்த னர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு முதல்வரிடம் அளித்த மனுவில், ‘‘தமிழகம் பெருமைப்படும் விதமாக கோதாவரி- காவிரி இணைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவும், மத்திய அரசிடம் நெல் குவிண்டாலுக்கு ரூ.5,400-ம் கரும்பு டன்னுக்கு ரூ.8,100-ம் பெற்றுத் தர வலியுறுத்த வேண்டும். அதுவரை அனைத்து விவசாயி களின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 40 கிலோ மூட்டைக்கு கூலியாக ரூ.2.80 கொடுப்பதை உயர்த்தி தமிழக அரசு ரூ.20 வழங்கி னால், அவர்கள் விவசாயிகளிடம் கையூட்டு பெறமாட்டார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும்’’ என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்