வேலூர், திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களில் நேற்று புதிதாக 564 பேருக்க கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதிகரிக்கத் தொடங்கியது. மே மாதம் தொடக்கத்தில் இது தினசரி பாதிப்பு 700 என்றளவை எட்டியது. இது படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ள நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்றைய கரோனா பாதிப்பு 90 என்றளவில் இருந்தது. மாவட்டத்தில் இதுவரை 44,905 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42,472 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,556 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றுக்கு இதுவரை 877 பேர் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாநகராட்சியிலும் கரோனா பாதிப்பு நேற்று 31- ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 176 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 6,070 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தி.மலை மாவட்டத்தில் புதிதாக 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,600-ஆக உயர்ந்துள்ளது. 39,015 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 6,070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago