காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கையின் விவரம்:
சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து பிரித்து, சுத்திகரித்து அகற்றுவதற்காக மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகளை அறிவித்துள்ளது. இந்த விதிகளை பின்பற்றுவதன் மூலம் மருத்துவக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைக்க இயலும். இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான அதிகாரம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது.
இந்த விதிகளின்படி மருத்துவமனைகளில் இருந்து உருவாகும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பதற்கு ஒப்படைக்க வேண்டும். மேலும் தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேல் சேமிக்கக் கூடாது.
தற்போது நிலவிவரும் கோவிட்-19 தொற்று சூழலில் மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே மருத்துவமனைகள், கோவிட்-19 பராமரிப்பு மையங்கள், தனிமைப்படுத்தல் முகாம்கள், மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து அந்தந்த பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago