ஊரடங்கு காலத்தில் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களுக்கான தவணைத் தொகையை வங்கிகள்,நுண் நிதி கடன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர்க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் - தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்களின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களுக்கான தவணைத் தொகையை வங்கிகள் மற்றும் நுண் நிதி கடன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி வசூல் செய்து வருவதாக தகவல் வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்றுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், வங்கிகள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் மீது ஏதேனும்புகார் இருந்தால் அவற்றை 0421 - 2971149 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago