செங்கை மின் நுகா்வோா் குறைதீர் எண்கள் அறிவிப்பு :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில் உள்ள மின் நுகர்வோர் மின் தடை சம்பந்தமான புகாருக்கு, இலவச எண்ணில், புகார் செய்யலாம் என மேற்பார்வை பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட மறைமலை நகர், செங்கல்பட்டு, பெரும்புதூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், திருமழிசை உள்ளிட்ட கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் நுகர்வோர், தங்கள் பகுதியில் ஏற்படும் மின் குறை மற்றும் தடங்கல்களுக்கு, ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும், 1912, 18004258977, 044-27423525, 9444099477 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டும் புகார் செய்யலாம்.

இதற்காக, மின்தடை நீக்கு மையம், 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1912 இயங்கவில்லை

இந்நிலையில் மின்தடை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள 1912 என்ற இலவச தொலைபேசி எண் சரிவர இயங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நுகர்வோர் 1912 என்ற தொலைபேசியில் புகார் தெரிவித்தால், சென்னை மின் பகிர்மான வட்டத்துக்குச் செல்கிறது. அப்போது, ‘இது சென்னை. செங்கல்பட்டு அல்ல. வேறு எண்ணில் தொடர்பு கொள்ளவும்’ என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதனால், செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில் சென்னையை ஒட்டியுள்ள மின் நுகர்வோர் புகார் செய்ய முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தப் பிரச்சினை கடந்த 3 ஆண்டுகளாக இருப்பதாகவும் இதற்கு மின் அதிகாரிகள் தீர்வு காணவில்லை என்றும் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்