மரக்காணம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (48). கட்டிட தொழிலாளி யான இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் மரக்காணம் அரசு மேல் நிலைப்பள்ளி அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந் தார்.
அப்போது மரக்காணம் திடீர்நகர் பகுதியைச் சேர்ந்த ராம்தேவ் என்ற அபினவ் மற்றும் 6 நபர்கள் வந்துள்ளனர். அப்போது தங்கராஜ் தரப்புக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த தகவலின் பேரில் மரக்காணம் போலீஸார் அங்கு சென்று திரண்டிருந்த கூட்டத்தினரை விரட்டி விட்டனர்.
இந்த மோதலில் காயம் அடைந்த தங்கராஜியின் நண்பர் ஆறுமுகத்திற்கு மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பினர். படுகாயம் அடைந்த ராம்தேவ் புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இத்தகவலறிந்த டிஐஜி பாண்டியன், எஸ்பி நாதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஆறுமுகம் (45), ஐயப்பன் (34), செந்தில்(40), ஏகாம்பரம் (38) மற்றும் ராம்தேவ்வின் நண்பர்கள் பூபரசன் (23), பாலமுருகன் (26), ஆகாஷ் (26) உட்பட 8 பேரை மரக்காணம் போலீஸார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago