ராமநாதபுரத்தில் : அரிய வகை மரக்கன்றுகள் நடவு :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம், பள்ளி வளாகங்களில் கிச்சன் கார்டன் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ள அரியவகை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் நோக்கில் பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் மரக்கன்றுகள் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார். மஞ்சள் கடம்பு, பரம்பை, குமிழ், மலை அரளி, இச்சி மரம், நாட்டு அத்தி, நறு உளி, பதிமுகம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரியவகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) எம்.பிரதீப்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்