ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 1,024 பேர் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டடுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று 171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44,433-ஆக இருந் தது. இதில், 41,691 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,890 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 852 பேர் உயிரிழந் துள்ளனர். கடந்த சில நாட்களாக கரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 214 பேர் கரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். 714 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந் துள்ளனர். 2,186 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 414 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 7 பேர் உயிரிழந் துள்ள நிலையில், 2,253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் புதிதாக 313 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 44 ஆயிரத்து 989-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 38 ஆயிரத்து 119 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 6,382 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும், கரோனா பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 488 பேர் உயிரிழந்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago