கூடுதல் தொழிலாளர்களுடன் இயங்கிய பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு ‘சீல்’ :

By செய்திப்பிரிவு

திருப்பூர் லட்சுமி நகர் வெங்கமேடு பகுதியிலுள்ள தனியார் பின்னலாடை நிறுவனம், ஊரடங்கு உத்தரவை மீறி 10 சதவீதத்துக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டு இயங்கி வந்தது. இதையடுத்து கோட்டாட்சியர் ப.ஜெகநாதன் தலைமையில், வடக்கு வட்டாட்சியர் பி.ஜெகநாதன், மண்டல துணை வட்டாட்சியர் எம்.சரவணன், துணை வட்டாட்சியர் எம்.சக்திவேல் தலைமையிலான வருவாய்த் துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேற்கண்ட ஏற்றுமதி நிறுவனத்தில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர். இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்' வைத்தனர்.

திருப்பூர் பூலுவபட்டி சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர். பின்னலாடை நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட 10 சதவீத தொழிலாளர்களின் பெயர் இருந்தால் மட்டுமே,அந்த தொழிலாளர்களை போலீஸார் அனுமதித்தனர். மேலும், நிறுவனத்தின் பட்டியலில் பெயர் இல்லாத பின்னலாடைத் தொழிலாளர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்