கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் இதுவரை 19,589 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, 16,476 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் 665 பேர், தனியார் மருத்துவமனைகளில் 437 பேர், கரோனா பராமரிப்பு மையத்தில் 167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,565 பேர் மருத்துவ உதவிகளுடன் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்.1-ம் தேதி முதல் இதுவரை 1,13,382 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பில் உள்ளது.
ஊரடங்கின் போது விதிமீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து ரூ.74,96,300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 1,17,676 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago