ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு நேற்று 1,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பால் தொற்று பாதிப்பு அதிகபட்ச எண்ணிக்கையாக மே மாதம் முதல் வாரத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 700 என்றளவில் இருந்தது. தளர்வில்லாத ஊரடங்கு போன்ற காரணங்களால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 44,154-ஆக இருந்தது. இவர்களில் 41,279 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,030 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் புதிதாக 243 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 335 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. 415 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 227 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 2,693 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 552 பேர் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் புதிதாக 334 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,671-ஆக உயர்ந்துள்ளது.37,635 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 6,554 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 482-ஆக அதிகரித் துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago