ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அநீதி களை தடுக்க தனி கவனம் செலுத்தப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓம் பிரகாஷ்மீனா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக உருவாக் கப்பட்ட மாவட்டத்தின் மூன்றாவது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற அவருக்கு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், காவல் கண்காணிப் பாளர் ஓம் பிரகாஷ் மீனா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டத்தை மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும். குறிப்பாக அரக்கோணம் சுற்று வட்டார பகுதியில் கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவர்கள் மீதுள்ள பழைய வழக்குகள் அனைத்தும் முடிக்கப்படுவதுடன் குண்டர் சட்டத்தின் கீழ் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை தடுக்க தனி கவனம் செலுத்தப் படும்’’ என்றார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜை மரியாதை நிமித்தமாக ஓம் பிரகாஷ் மீனா சந்தித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago