‘‘குழந்தைச் செல்வங்களே எங்கே, நீ எங்கே’’ - பாடல் மூலம் மாணவர்கள் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஆசிரியை : சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட வீடியோ

By பி.டி.ரவிச்சந்திரன்

கரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாடல் மூலம் மாணவர்களுடனான தன் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டு பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் திறந்து 14 மாதங்கள் ஆன நிலையில் ஆசிரியர்கள், மாணவர்களை சந்திக்க வாய்ப் பில்லாதநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. இதனால் மாணவர்களை சந்திக்க முடியாமல் தவித்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள பழைய வத்தலகுண்டு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் முருகேஸ்வரி, ‘‘குழந்தைச் செல்வங்களே எங்கே, நீ எங்கே’’ என மாணவர்களை தேடும் பாடல் ஒன்றை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இவர் சினிமா பாடலை டப் செய்து தானே பாடல் எழுதி பாடி பள்ளி வகுப்பறை, மாணவர்களுடனான குழு புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டு மாணவர்களுடன் தன் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப் பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்