திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. முன்பு தினமும் 500-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஊரடங்குக்கு பின்பு நேற்றுமுன்தினம் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 287 ஆக குறைந்தது.
இந்நிலையில் நேற்று முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. காய்கறி, மளிகை உள்ளிட்ட சில கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் திண்டுக்கல் நகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது என கரோனா விதிமுறைகளை யாரும் கடைப்பிடிக்கவில்லை.
ஊரடங்கு தளர்வில் அனு மதிக்கப்படாத டீக்கடைகள் உள்ளிட்ட பல கடைகள் திறக்கப்பட்டிருந்தன. நேற்றைய நிலையைப் பார்த்தால் கரோனா பாதிப்பு மீண்டும் உயருமோ என சுகாதாரத் துறையினர் அச்ச மடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago