தமிழ் வளர்த்த சான்றோர்களைப் பற்றிய நூல்கள் வெளியிட வேண்டும் என தொழில் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பாஜக மாநில பொதுச் செயலர் ராம னிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து பாஜக மாநில பொதுச் செயலர் ராம னிவாசன் மல்லாங்கிணரில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:
திருச்சுழி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.200 கோடி முதலீட்டில் ஜவுளிப் பூங்கா அமைய உள்ளது. இதனால் ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் ஏற்படுவதோடு, சுமார் 2 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இது தொடர்பாக முதலீட்டாளர்களுக்கும், அமைச்ச ருக்குமான கலந்துரையாடல் கூட் டத்தை நாங்கள் ஏற்பாடு செய் கிறோம். மேலும் சங்கரதாஸ் சுவாமிகள் போன்ற நாடகத் தமிழ் ஆசிரியர்கள் எழுதிய வசனங்கள், உரையாடல்கள் அனைத்தும் அழிந்து கொண்டிருக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறை, நாடக மூல உரையாடல் ஆவணங்களைத் தேடி எடுத்து தொகுப்புகளாக வெளியிட வேண்டும்.
அதேபோல "தமிழ் வளர்த்த சான்றோர்கள்" என்ற பெயரில் புத்தகங்கள் நிறைய வரவேண்டும். அதிலும் முதற்கட்டமாக அதிகம் அறியப்படாத தமிழ் வளர்த்த சான்றோர்கள் குறித்து நூல்களை வெளியிடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago