கிருஷ்ணகிரி வழியாக தேசியநெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்லும் ஓட்டுநர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
அனைத்திந்திய வாகன ஓட்டுநர் பேரவையின்,கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே அவ்வழியாக செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகளை வழங்கினர். இதுதொடர்பாக, ஓட்டுநர் பேரவை நிர்வாகிகள் கூறும்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள் ஊரடங்காலும், ஆட்கள் பற்றாக் குறையாலும் மூடப்பட்டுள்ளன.
இதனால் நீண்ட தூரத்தில் இருந்து சரக்குகள் ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்கள், அவர்களது உதவியாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் சிரமம் ஏற்படுகிறது. இதனை தீர்க்கும் வகையில் 250 ஓட்டுநர்கள், அவர்களது உதவியாளர்களுக்கு உணவு, தண்ணீர் அளித்து வருகிறோம் என்றனர்.நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் வெங்கடாசலம், துணை தலைவர் ராஜா, நிர்வாகிகள் ஜெயகுமார், சின்னமணி, சாம்ராஜ்,இனாயத் கான், கணேஷ்ராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago