தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் திருவண்ணாமலை அடுத்த பெரியகிளாம் பாடி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் கோபிநாத் வரவேற்றார். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்.
இதற்கிடையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 51 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகிறது. 52-வது நேரடி நெல் கொள்முதல் நிலையம், பெரியகிளாம்பாடி ஊராட்சியில் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 12 கிராமங்களில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.1,958-க்கும் மற்றும் பொது ரக நெல் குவிண்டால் ரூ.1,918-க்கும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயி களிடம் இருந்து பெறப்படும் நெல் மூட்டைக்கான தொகையை, அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் 2020-21-ம் ஆண்டில் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் மூலம் 81 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 17,500 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.138 கோடி செலுத்தப்பட்டுள்ளது” என செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago