நுண்ணூட்ட குறைபாடுகளால் பயிர்களின் விளைச்சல் பாதிப்பு : வேளாண் விஞ்ஞானிகள் அறிவுரை

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் காய்கறிபயிர்கள் பெருமளவில் பயிரிடப்பட்டுள்ளன. குறிப்பாக தக்காளி 200 ஹெக்டேர், கத்தரி 400 ஹெக்டேர், மிளகாய் 500 ஹெக்டேர் அளவில் பயிரிடப்பட்டுள்ளது. பெருகி வரும்மக்கள்தொகையின் தேவையை நிறைவேற்ற காய்கறி உற்பத்தியை பெருக்க வேண்டும், குறைந்து வரும் நிலப்பரப்பில் குறைந்திருக்கும் மண் வளத்தைக் கொண்டு காய்கறி உற்பத்தியை அதிகரிப்பது, விவசாயத்தில் உள்ள பெரும் சவால். உற்பத்தித் திறனை அதிகரிக்க உர மேலாண்மை மிக அவசியம் என்கின்றனர் வேளாண் விஞ்ஞானிகள்.

காய்கறி சாகுபடியில் உர மேலாண்மை குறித்து பொங்கலூர் வட்டார வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் க.வி.ராஜலிங்கம், திட்ட ஒருங்கிணைப்பாளர் ந.ஆனந்தராஜா ஆகியோர் கூறும்போது, "உரப்பாசனம் என்பது உரங்களைசொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு இடுதலாகும். செடிகளுக்கு அளிக்கப்படவேண்டிய நீரையும், உரத்தையும்துல்லியமாக கணக்கிட்டு செடிகளுக்கு அளிக்கலாம். வேரில்சென்றடைவதால், சத்துகள் வீணாகாமல் பயிர்களால் எளிதாகஎடுத்துக்கொள்ளப்படுகிறது. வேர்விடும் பருவத்தில் அதிக மணிச்சத்து, வளர்ச்சி காலத்தில் தழைச்சத்து, பூக்கும், காய்க்கும் பருவத்தில் அதிக சாம்பல் சத்து என தேர்வு செய்து, பயிர்களுக்கு வழங்க வேண்டும். இதனால் அதிக விளைச்சல் கிடைக்கும். நீர் சேமிப்போடு, ஆட்செலவு மற்றும் நேரம் ஆகியவற்றை அதிகளவில் குறைக்கலாம்.

நுண்ணூட்டங்களின் குறைபாடுகளால் பயிர்களின் விளைச்சல் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.

இவற்றை போக்க காய்கறி பயிர்களுக்கு 0.5 சதவீத நுண்ணூட்டச் சத்து கலவையை, நடவுசெய்த 30,45, 60-வது நாட்களில் தெளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்