கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - கரோனாவுக்கு 23 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 539 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையும் சேர்த்து இதுவரை 52,061 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 769 பேர் உட்பட 46,432 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,285பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 13 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 588 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 308 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்துஇதுவரை22,992 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 147 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 413 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 37,646 பேருக்கு தொற்று ஏற் பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 284 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்