விருதுநகரில் வேனில் கடத்திய 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : அரிசி ஆலை உரிமையாளர் கைது

By செய்திப்பிரிவு

விருதுநகரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

விருதுநகர் அல்லம்பட்டி முக்கு பகுதியில் போலீஸார் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரு வேன்களில் கடத்தி வரப்பட்ட 14.5 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அல்லம்பட்டி பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையின் உரிமையாளர் கண்ணன் (45), வேன் ஓட்டுநர் மூர்த்தி (45) ஆகியோரை கைதுசெய்தனர். ரேஷன் கடை விற்பனையாளர் உமாமுருகேஸ்வரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எம்.கரிசல்குளம் சோதனைச் சாவடியில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த வேனில் இருந்த 54 மூட்டைகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த மணி (22), கதிர்வேல் (32) ஆகியோரை கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்ட வேனையும் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்