நாகை நம்பியார் நகரில் அமைக்கப்பட்டு வரும் - துறைமுகத்துக்கான கூடுதல் நிதிக்கு பரிந்துரை : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உறுதி

By செய்திப்பிரிவு

நாகை நம்பியார் நகரில் அமைக் கப்பட்டு வரும் துறைமுகத்துக்கு தேவையான கூடுதல் நிதியை தனது துறை சார்பில் வழங்க பரிந்துரை செய்வதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உறுதியளித்துள்ளார்.

நாகை பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை மாநில சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், நாகை நம்பியார்நகர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, நாகை நம்பியார் நகரில் ரூ.35 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் துறைமுக கட்டு மானப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சரிடம் நம்பியார் நகர் பஞ்சாயத்தார் கூறியது:

நம்பியார் நகரில் துறைமுகம் கட்டுமானப் பணி தன்விருப்ப நிதியில் இருந்து தொடங்கப்பட் டுள்ளது. இதில், நாகை நம்பியார் நகர் பொதுமக்கள் சார்பில் ரூ.12 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய எஞ்சிய தொகை இன் னும் வரவில்லை. இதுவரை 20 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. மேலும், துறைமுகம் அமைப்பதற்கு ரூ.35 கோடி நிதி போதுமானது இல்லை. எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.

அவர்களுக்கு அமைச்சர் பதிலளித்தபோது, “நம்பியார் நகரில் துறைமுகம் அமைய கூடுதல் நிதி எவ்வளவு தேவைப்படும் என்பதை கணக்கீடு செய்துகொடுங்கள். அந்த நிதியை எனது துறை சார்பில் ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்கிறேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து, வேளாங்கண்ணியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி யில், ஆட்சியர் பிரவீன் பி.நாயர், கூடுதல் ஆட்சியர் பிரசாந்த், எம்எல்ஏ முகமது ஷா நவாஸ், முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், உணவின் தரம் குறித்து நேற்று காலை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு செய்தார். அப்போது, பிறந்த குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை அரங்குகள், குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவமனை கட்டிடத்துக்கான கட்டுமானப் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து, மருத்துவமனையின் சமையலறைக்குச் சென்று, கரோனா தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் உண வின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அவருடன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்