திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த ஆலம்பாடி நெய்க்காரன்பாளையத்தில் எண்ணெய் ஆலை செயல்பட்டு வந்தது.
இங்கு ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், தொழிலாளர் களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டனர். இதைத்தொடர்ந்து, காங்கயம் வட்டாட்சியர் பூ.சிவகாமி, வருவாய் ஆய்வாளர் கனகராஜ் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக வட்டாட்சியர் பூ.சிவகாமி கூறும்போது, "அத்தியாவசிய தேவையில் எண்ணெய் ஆலை உள்ளது. ஆனால், தொற்று பரவலுக்கு காரணமாக இருந்ததால், ரூ.10 ஆயிரம் அபராதம்விதிக்கப்பட்டு, எண்ணெய் ஆலைக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். காங்கயம் சுற்றுவட்டார பகுதியில் எண்ணெய் மற்றும் அரிசி ஆலைகள் தொற்று பரவலுக்கு காரணமாக அமையக்கூடாது" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago