நாமக்கல் அருகே புதுச்சத்திரம் திருமலைப்பட்டியைச் சேர்ந்தவர் கவுதம் (19). இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பதுங்கியிருந்த கவுதமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மற்றொருவர் கைது
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 14 வயதான பெண் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தால் அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமியின் தாய் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் சிறுமியின் அண்ணன் உறவு முறை கொண்ட சுரேஷ் (31) என்பவர் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை மோகனூர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago