செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்துக்கு உட்பட்ட திருமணி கிராமத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான ஹெச்எல்எல் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. ஆனால், இங்கு இதுவரை தடுப்பூசி தயார் செய்யப்படவில்லை.
இங்கு கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான பணியைத் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த நிறுவனத்தை அண்மையில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். மேலும், சென்னை தலைமைச் செயலகத்தில் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதில், நிறுவன இணை நிர்வாக இயக்குநர் சுஜித்ரா இலா, செயல் இயக்குநர் சாய் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனத்தினர் நேற்று முன்தினம் செங்கல்பட்டு ஹெச்எல்எல் நிறுனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், அரக்கோணம் எம்.பி. எஸ் ஜெகத்ரட்சகன் ஹெச்எல்எல் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினார். திமுகவைச் சார்ந்த மக்கள்பிரதிநிதிகள் தொடர்ந்து இந்நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago