வேலூர் மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 250 படுக்கைகள் வசதிகள் கொண்ட பிரிவை மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். வேலூர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தலைமையில், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்தி கேயன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், அரசு பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை பல் நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், காட்பாடியில் புதிய தாலுகா மருத்துவமனை அமைக்க வேண்டும், குடியாத்தம் அரசு மருத்துவமனையை வேலூர் மாவட்ட தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும், பேராணம்பட்டு அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், அணைக் கட்டு அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ வசதிகள், கே.வி.குப்பத்தில் புதிய தாலுகா மருத்துவமனை தொடங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் மணிவண்ணன், மாநகர நல அலுவலர் மருத்துவர் சித்ரசேனா உள்ளிட்டோர் உடனிருந் தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago