திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக சிபி சக்கரவர்த்தி, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக ஓம் பிரகாஷ் மீனா, தி.மலை மாவட்ட எஸ்பி யாக அல்லட்டிபல்லி பவன் குமார் ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சைபர் செல் சிஐடி பிரிவு காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், நாகப்பட்டிணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, ராணிப் பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் தற்போதைய காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் சட்டம் -ஒழுங்கு துணை ஆணையர் அல்லட்டிபல்லி பவன் குமார் ரெட்டி, திருவண்ணாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அரவிந்த், திருப்பூர் மாநகர சட்டம் -ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago