கரோனா தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என திமுகவினருக்கு, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்பேரில் நீலகிரி மாவட்டம் உதகை நகர திமுக சார்பில் ஆட்டோ ஒட்டுநர்கள், சிறு வியாபாரிகள், திருநங்கைகள், வாகன பழுது பார்ப்போர் உட்பட 8 சங்கங்களை சேர்ந்த 1,200 பேருக்கு நிவாரணப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டன. உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், உதகை நகரச் செயலாளர் ஜார்ஜ் தலைமையில், வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர். 24 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், உதகை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட துணைச் செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, மாவட்டப் பொருளாளர் நாசர் அலி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago