தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் :

By செய்திப்பிரிவு

நாகை, மயிலாடுறை மாவட்டங்களில் சிறப்பு தூர் வாரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் பிரவீன் பி.நாயர் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு தலைமை வகித்து, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (பொதுப்பணித் துறை) சந்தீப் சக்சேனா பேசியது:

நாகை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களை தூர் வார எடுத்துக்கொள்ளப்பட்ட 89 பணிகளில் 62 பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன. மீதியுள்ள பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களை தூர் வார 26 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.

பின்னர், பனங்குடி, சீயாத்தமங்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை சந்தீப் சக்சேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் தண்டலை, காணூர் ஆகிய இடங்களில் ஓடம்போக்கி ஆறு, கொட்டாரக்குடியில் காட்டாறு ஆகியவற்றில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்