திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பேயாலம்பட்டு கிராமத்தில் உள்ள முனியப்பன் கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
செங்கத்தை அடுத்த பேயாலம்பட்டு கிராமத்தில் உள்ள முனியப்பன் மற்றும் பச்சையம்மன் கோயில் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. அன்றைய தினத்தில் வாஸ்து ஹோமம், சக்தி ஹோமம், மகா பூர்ணாஹுதி பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தம்பதி பூஜை, சுவாமிக்கு கண் திறப்பு, சக்தி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நேற்று நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, மங்கள இசை ஒலிக்க முனியப்பன் மற்றும் பச்சையம்மன் சுவாமி மீது புனித நீர் ஊற்றப்பட்டது. இதையடுத்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கரோனா ஊரடங்கு காரணமாக முக்கிய நபர்கள் மட்டுமே பங்கேற்றனர். விழாக் குழு தலைவர் சங்கர் மாதவன் தலைமையில் கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago