கூடுதல் கட்டணம் வசூலிக்கும் : தனியார் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூரில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சில தனியார் மருத்துவமனைகள், நோய் பாதிக்கப்பட்டுள்ளவரின் குடும்பத்தினரிடம் அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்து வருவதாக புகார்கள் வருகின்றன.

ஊத்துக்குளி ஆர்.எஸ். மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த திம்மநாயக்கர் மனைவி ருக்குமணி (65) என்பவரை, கடந்த 16-ம் தேதி கரோனா சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதற்காக ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தியதுடன், ரூ.70 ஆயிரத்துக்கு மருந்தும் வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில், மனைவி இறந்துவிட்டதாகவும், மருத்துவ சிகிச்சைக்கான பாக்கி தொகை ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தினால்தான் சடலத்தை அளிப்போம் என்றும் அந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அரசின் உத்தரவை மீறி, சில தனியார்மருத்துவமனைகள் கரோனா தொற்றை பயன்படுத்தி மருத்துவ சேவையை பெரும் லாபமீட்டும்வர்த்தக வாய்ப்பாக மாற்றும் முயற்சியில் உள்ளனர். கூடுதல் கட்டண வசூலில் ஈடுபடும் மருத்துவமனைகள் மீது மாவட்ட நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்