ஒரு முட்டை ரூ.8-க்கு விற்ற கடைக்கு ‘சீல்’ :

By செய்திப்பிரிவு

திருப்பூரில் ஒரு முட்டை ரூ.8-க்கு விற்பனை செய்த கடைக்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினர் மற்றும் போலீஸார் நேற்று ‘சீல்’ வைத்தனர்.

திருப்பூர் - தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் அருகே வசிப்பவர் ஜெயபிரகாஷ். இவர், சொந்தமாக அப்பகுதியில் பல்பொருள் அங்காடி வைத்துள்ளார். கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பால், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டும் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. பால் விற்பனை நடைபெறுவதாக கூறிவிட்டு, கூடுதல் விலைக்கு மளிகைப் பொருட்களை பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அந்த கடைக்கு முட்டை வாங்க ஒருவர் சென்றுள்ளார். ஒரு முட்டையின் விலை ரூ.8 என்று கூறியதால் ஆத்திரமடைந்தார்.

இதுதொடர்பாக திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்குநல்லூர் போலீஸார் நேற்று சென்றனர். சம்பந்தப்பட்ட கடையில் 3 இளைஞர்கள் மளிகைப் பொருட்களை பேக்கிங் செய்து கொண்டிருந்தனர். பால் பொருட்களை விற்பதாகக் கூறி, கூடுதல் விலைக்கு மளிகைப் பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து, கடைக்கு நல்லூர் போலீஸார் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்