ஊரடங்கை மீறிய 3,000 வாகனங்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் கரோனா ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட 3,000 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஊரடங்கு விதிகளை மீறி இயக்கப்பட்ட 2,776 இருசக்கர வாகனங்கள், 14 மூன்று சக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 3,004 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாராயம் காய்ச்சியது, மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக 404 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத 23,016 பேரிடம் இருந்து ரூ.46 லட்சமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 1,069 பேரிடம் இருந்து ரூ.5.34 லட்சமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி மணல் அள்ளியது குறித்து 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, 75 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்